< Back
தேசிய செய்திகள்
விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவர்
தேசிய செய்திகள்

விமானத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவர்

தினத்தந்தி
|
10 Nov 2023 3:30 AM IST

முதியவரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து, தனக்கு வேறு இருக்கை ஒதுக்குமாறு கோரினார்.

பெங்களூரு,

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் திருப்பதியை சேர்ந்த 32 வயதான பெண் 6ஆம் தேதி பிராங்பெர்டில் இருந்து விமானத்தில் பெங்களூரு வந்தார். விமானத்தில் அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது அருகில் அமர்ந்திருந்த முதியவர் பெண்ணின் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

முதியவரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து, தனக்கு வேறு இருக்கை ஒதுக்குமாறு கோரினார்.

பின்னர், விமானம் பெங்களூருவுக்கு வந்ததும், அந்த பெண் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய காவல் நிலையத்தில் அந்த முதியவர் மீது புகார் அளித்தார். இதனையடுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து முதியவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்