தொடர் கனமழையால் எல் சல்வடாரில் பயங்கர நிலச்சரிவு 7 பேர் பலி
|மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடாரில் கடந்த சில வாரங்களாகவே தொடர் கனமழை பெய்து வருகிறது.
சான் சல்வடார்,
மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடாரில் கடந்த சில வாரங்களாகவே தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் தலைநகர் சான் சல்வடாரில் நேற்று முன்தினம் திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. இடைவிடாது கொட்டிய பேய் மழையால் தழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழந்தது.
அதை தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். எல் சல்வடாரில் கடந்த 1-ந்தேதி முதல் தற்போது வரை மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.