கூரியர் நிறுவனத்தின் காரை நிறுத்தி ரூ.5.4 கோடி கொள்ளையடித்து சென்ற போலீஸ் வேடமனிந்த மர்ம கும்பல்
|இந்த சம்பவம் பற்றி கூரியர் நிறுவனம் போலீசில் புகார் அளித்தனர்.
தானே,
மராட்டிய மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தின் கார் கடந்த 14ம் தேதி நள்ளிரவில் ஜல்கானில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தானே மாவட்டம் அட்காவ்ன் அருகே சென்ற போது அந்த காரை திடீரென ஒரு காரில் வந்த 8 பேர் வழி மறித்தனர்.
அவர்கள் அனைவரும் போலீஸ் வேடமிட்டு சோதனை செய்வது போல அங்கு வந்தனர். பின்னர் கூரியர் நிறுவனத்தின் காரை சோதனை செய்வது போல அவர்களிடம் இருந்த ரூ.5.4 கோடி பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து கூரியர் நிறுவனம் போலீஸ் நிலையத்தை அனுகிய போது அவர்கள் அனைவரும் போலீஸ் போல் வேடமிட்டு வந்து பணத்தை கொள்ளை அடித்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் பற்றி கூரியர் நிறுவனம் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் 8 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.