< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
பணமோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுக்கு அமலாக்கத்துறை சம்மன்
|3 Oct 2024 1:20 PM IST
பணமோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஐதராபாத்,
ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ரூ.20 கோடிக்கு நிதி முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் பணமோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
61 வயதான முகமது அசாருதீன் இன்று பெடரல் ஏஜென்சியின் அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்கும்படி அந்த சம்மனில் கேட்டு கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணை இது என்று கூறப்படுகிறது.