< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அன்னிய செலாவணி மோசடி வழக்கு: ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்தின் தியேட்டர் பறிமுதல் - அமலாக்கத்துறை அதிரடி
|2 Sept 2022 5:43 AM IST
அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்ட ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான தியேட்டரை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து உள்ளது.
புதுடெல்லி,
சென்னையை சேர்ந்த ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனம் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனம் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக தஞ்சாவூரில் உள்ள தியேட்டர் ஒன்றை அமலாக்கத்துறை பறிமுதல் செய்து உள்ளது. இந்த தகவலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளனர்.