உத்தரகாண்டில் முன்னாள் மந்திரி ஹரக் சிங் ராவத்துக்கு தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
|2022-ம் ஆண்டு உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜனதா கட்சியில் இருந்து ராவத் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
புதுடெல்லி,
வன ஊழல் வழக்கில் உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் கட்சி தலைவருமான ஹரக் சிங் ராவத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். உத்தரகாண்ட், சண்டிகர் மற்றும் டெல்லியில் உள்ள ஹரக் சிங் ராவத்துக்கு தொடர்பான 10க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரகாண்ட், சண்டிகர் மற்றும் டெல்லியில் உள்ள ராவத்துக்கு தொடர்பான 10க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
2022-ம் ஆண்டு உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜ.க.வில் இருந்து ராவத் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
ராவத் பா.ஜ.க.வில் இருந்த போது உத்தரகாண்ட் மாநிலத்தின் வனத்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார். அப்போது புலிகள் சபாரி திட்டத்தின் கீழ் கார்பெட் பூங்காவின் பக்ரோ மலைத்தொடரில் சட்டவிரோதமாக மரம் வெட்டுதல் மற்றும் கட்டுமானத்தில் ஈடுபட்டதாக ராவத் மற்றும் அவரது சில துறை அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றசாட்டு தொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்திருந்த அமலாக்கத்துறை இன்று ராவத்துக்கு தொடர்புடைய பல இடங்களில் சோதனை செய்வது வருவது அரசியல் வட்டரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.