< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
விசாரணைக்கு ஆஜராக மறுப்பு: கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை புதிய வழக்கு
|4 Feb 2024 12:14 AM IST
டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கெஜ்ரிவால் மீது நேற்று அமலாக்கத்துறை புதிதாக வழக்கு பதிவு செய்து உள்ளது.
புதுடெல்லி,
டெல்லி அரசின் மதுபானக்கொள்கை முறைகேடு தொடர்பாக முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியது. ஆனாலும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் மீது டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று அமலாக்கத்துறை புதிதாக வழக்கு பதிவு செய்து உள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திவ்யா மல்கோத்ரா, அடுத்த விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை புதிய வழக்கு பதிவு செய்திருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.