< Back
தேசிய செய்திகள்
அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல மிகப்பெரிய சதி நடக்கிறது  -  ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல மிகப்பெரிய சதி நடக்கிறது - ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
18 April 2024 9:56 PM IST

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவல் தற்போது நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் பெறுவதற்கான இனிப்பு வகைகள் மற்றும் மாம்பழங்கள் சாப்பிடுகிறார் என அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இனிப்பு அதிகமாக சாப்பிட்டு ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து அதன்மூலம் ஜாமீன் பெற முயற்சிப்பதாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பொய் சொல்கிறது. அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்வதற்கு மிகப்பெரிய சதி நடக்கிறது என டெல்லி மாநில மந்திரி அதிஷி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிஷி கூறியதாவது:-

பா.ஜனதா அதன் பிரிவான அமலாக்குத்துறை மூலமாக அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சி செய்கிறது. கெஜ்ரிவாலுக்கு வீட்டில் சமைத்து வழங்கப்படும் உணவை நிறுத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். சர்க்கரையுடன் தேனீர் குடிப்பதாகவும், இனிப்புகள் சாப்பிடுவதாகவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பொய் கூறியுள்ளது. அது முற்றிலம் பொய். அரவிந்த் கெஜ்ரிவால் செயற்கை இனிப்பை எடுத்து வருகிறார்.

சர்க்கரை அளவு குறைவது உயிருக்கு ஆபத்தானது என்பதால் நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் அல்லது ஏதேனும் சாக்லேட் எடுத்துச் செல்லுமாறு டாக்டர்கள்களால் கேட்டுக்கொள்ளப்படுவார்கள். உருளைக்கிழங்குடன் பூரி சாப்பிடுவதாக அமலாக்கத்துறை சொல்கிறது. இவ்வளவு பொய் சொன்னதற்காக அமலாக்கத்துறை கடவுளுக்கு பயப்பட வேண்டும். நவராத்தியின் முதல் நாளில் மட்டும் பூரி சாப்பிட்டார். வீட்டு உணவை நிறுத்துவதற்காக இந்த பொய்கள் எல்லாம் அமலாக்கத்துறை மற்றும் பா.ஜனதாவல் பரப்பப்படுகிறது.

கடந்த சில நாட்களாக அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 300 mg/dl-க்கு அதிகமாக உள்ளது. ஆனால் திகார் ஜெயில் அதிகாரிகளால் இன்சுலின் மறுக்கப்படுகிறது. வீட்டில் சமைத்த உணவை நிறுத்தி கெஜ்ரிவாலை கொல்ல சதி நடக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்