< Back
தேசிய செய்திகள்
ஒடிசா: ஆளுங்கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் ரூ.4 கோடி சொத்துக்கள் முடக்கம்
தேசிய செய்திகள்

ஒடிசா: ஆளுங்கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் ரூ.4 கோடி சொத்துக்கள் முடக்கம்

தினத்தந்தி
|
31 July 2022 4:05 AM IST

ஒடிசாவில் ஆளுங்கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் ரூ.4 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது.

புவனேசுவரம்,

ஒடிசாவில் ஆளும் பிஜூஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பிரவத் ரஞ்சன் பிஸ்வால்.

இவரும், மீடியா குரு கன்சல்டண்ட்ஸ் என்ற தனியார் நிறுவனமும் கூட்டு சேர்ந்து மக்களிடம் முன்னுரிமை பங்குகள் வழங்குவதாக ஆசை காட்டி மோசடியாக டெபாசிட் தொகைகளை பெற்று ஏமாற்றி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் பிரவத் ரஞ்சன் பிஸ்வால் மற்றும் மீடியா குரு கன்சல்டண்ட்ஸ் நிறுவனத்துக்கும் சொந்தமான ரூ.3 கோடியே 92 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

மேலும் செய்திகள்