< Back
தேசிய செய்திகள்
சட்டவிரோத பணபரிமாற்றம்: சத்தீஷ்கார் முதல்-மந்திரியின் துணைச்செயலாளர் கைது
தேசிய செய்திகள்

சட்டவிரோத பணபரிமாற்றம்: சத்தீஷ்கார் முதல்-மந்திரியின் துணைச்செயலாளர் கைது

தினத்தந்தி
|
2 Dec 2022 11:56 PM IST

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை சத்தீஷ்கார் முதல்-மந்திரியின் துணைச்செயலாளரை கைது செய்தனர்.

சத்தீஷ்கார் மாநிலத்தில் இருந்து கொண்டு செல்லப்படுகிற ஒவ்வொரு டன் நிலக்கரிக்கும் டன்னுக்கு ரூ.25 சட்டவிரோதமாக வசூலிக்கப்படுவதாக ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் மூத்த அதிகாரிகள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் இடைத்தரகர்களுக்கு தொடர்பு உள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பான வருமான வரித்துறையின் நடவடிக்கையை அடுத்து இந்த விவகாரத்தில் நடந்துள்ளதாக கூறப்படுகிற சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரிக்கிறது.

இதில் கடந்த அக்டோபர் மாதம் சமீர் விஷ்ணோய் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், மேலும் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் மாநில முதல்-மந்திரி பூபேஷ் பாகலின் துணைச்செயலாளர் அந்தஸ்து அதிகாரி சவுமியா சவுராசியாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவர் அதிகாரமிகுந்த அதிகாரி ஆவார்.

மேலும் செய்திகள்