< Back
தேசிய செய்திகள்
சீனாவில் சுவாச பாதிப்புகள் அதிகரிப்பு எதிரொலி; கர்நாடகாவில் அறிவுறுத்தல் வழங்கிய சுகாதார துறை
தேசிய செய்திகள்

சீனாவில் சுவாச பாதிப்புகள் அதிகரிப்பு எதிரொலி; கர்நாடகாவில் அறிவுறுத்தல் வழங்கிய சுகாதார துறை

தினத்தந்தி
|
29 Nov 2023 7:21 AM IST

அது ஒரு தொற்ற கூடிய நோய் என்றும் 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்க கூடும் என தெரிவித்தது.

பெங்களூரு,

சீனாவில் சில வாரங்களாக குழந்தைகள் இடையே சுவாச பாதிப்புகள் அதிகரிப்பு என செய்திகள் வந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த ஞாயிற்று கிழமை அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியது.

அதில், நிலைமை ஆபத்து ஏற்படும் வகையில் இல்லை என்றும் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் கர்நாடகாவில், பருவகால புளூ வைரசின் பாதிப்புகளை முன்னிட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சுகாதார துறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

அது ஒரு தொற்ற கூடிய நோய் என்றும் 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்க கூடும் என தெரிவித்தது. இதனால், குறைவான இறப்பு விகிதங்களே உள்ளன என அறியப்படுகிறது.

எனினும், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கும், ஸ்டீராய்டு உள்ளிட்ட நீண்டகால மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்வோருக்கும் அதிக பாதிப்புகள் ஏற்பட கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், காய்ச்சல், ஜுரம், சுவையுணர்வு இழப்பு, குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும். அதிக பாதிப்பு நிலையில் உள்ளவர்களுக்கு 3 வாரங்கள் வரை வறட்டு இருமலும் காணப்படும். மக்கள் இருமும்போதும், தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கை பொத்தி கொள்ள வேண்டும்.

அடிக்கடி கை கழுவ வேண்டும். தேவையின்றி முகத்தின் மீது தொட வேண்டாம். நெருக்கடியான பகுதிகளில் முக கவசங்களை பயன்படுத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்