< Back
தேசிய செய்திகள்
ராகுல்காந்தியின் பாதயாத்திரை எதிரொலி; சித்ரதுர்காவில் போக்குவரத்து மாற்றம்
தேசிய செய்திகள்

ராகுல்காந்தியின் பாதயாத்திரை எதிரொலி; சித்ரதுர்காவில் போக்குவரத்து மாற்றம்

தினத்தந்தி
|
10 Oct 2022 6:45 PM GMT

சித்ரதுர்காவில் ராகுல் காந்தியின் பாதயாத்திரையையொட்டி சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரசுராம் தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு;


ராகுல்காந்தி பாதயாத்திரை

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் ஒற்றுமைக்கான பாதயாத்திரை நடத்தி வருகிறார். தற்போது கர்நாடகத்தில் இந்த பாதயாத்திரை நடந்து வருகிறது. இந்நிைலயில் 9-வது நாளான நேற்று சித்ரதுர்காவில் பாதயாத்திரை மேற்கொண்டார். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் வாகன போக்குவரத்துகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்று நிருபர்களிடம் பேசிய போலீஸ் சூப்பிரண்டு பரசுராம் கூறியதாவது:- ராகுல்காந்தி கலந்து கொண்ட நாட்டின் ஒற்றுமைக்கான பாதயாத்திரை சித்ரதுர்காவில் தொடர்ந்து 5 நாட்கள் நடக்கிறது. இந்த பாதயாத்திரை இரியூர்-செல்லகெரே வழியாக மொலகால்மூரு சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து பல்லாரி செல்கிறார். இதனால் பாதயாத்திரை நடைபெறும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்தில் மாற்றம்

அதன்படி பல்லாரியில் இருந்து வரும் வாகனங்கள் ஒசகோட்டை வழியாக பெங்களூருவிற்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல ஆந்திரா மாநிலம் அனந்தபுராவுக்கு செல்லும் வாகனங்களுக்கும் மாற்று பாதைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதயாத்திரையில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க சித்ரதுர்காவிற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை 48-ல் நிறுத்தி வைக்கப்பட்டு, சோதனை செய்யப்படும். மேலும் 2 போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்