< Back
தேசிய செய்திகள்
தேர்தல் ஆணையம் திருடர்களை அங்கீகரிக்கலாம், திருட்டை அல்ல - ஆதித்ய தாக்கரே வேதனை
தேசிய செய்திகள்

தேர்தல் ஆணையம் திருடர்களை அங்கீகரிக்கலாம், திருட்டை அல்ல - ஆதித்ய தாக்கரே வேதனை

தினத்தந்தி
|
19 Feb 2023 4:49 AM IST

தேர்தல் ஆணையத்தால் திருடர்களை அங்கீகரிக்க முடியும், ஆனால் திருட்டை அல்ல என ஆதித்ய தாக்கரே வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.

குடும்பத்திடம் இருந்து பறிபோன கட்சி

தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் ஏக்நாத் ஷிண்டே தான் உண்மையான சிவசேனா என அறிவித்தது. ஏக்நாத் ஷிண்டேவுக்கு சிவசேனா பெயர், சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பால் தாக்கரேவால் தொடங்கப்பட்ட சிவசேனா, அவரது மகன் உத்தவ் தாக்கரே மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து பறிபோய் உள்ளது.

ஆதித்ய தாக்கரே வேதனை

இது தொடர்பாக பால்தாக்கரேவின் பேரனும், முன்னாள் மந்திரியுமான ஆதித்ய தாக்கரே டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- முழுக்க, முழுக்க சமரசம் செய்யப்பட்ட நிறுவனம் (தோ்தல் ஆணையம்) ஜனநாயகத்தை அழிக்க வேண்டும் என துடிக்கும் திருடர்கள் கூட்டத்துக்கு அங்கீகாரத்தை கொடுத்து உள்ளது. இதனால் திருட்டை அங்கீகரிக்க முடியாது. ஓடி ஒளிந்து, திருட்டு நபர்களுக்கு தான் மற்றவர்களின் அடையாளம் தேவைப்படுகிறது. அவர்களுக்கு தங்கள் சொந்த முகத்தை காட்ட அவமானமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்