< Back
தேசிய செய்திகள்
கிழக்கு லடாக் விவகாரம்: இந்தியா-சீனா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை
தேசிய செய்திகள்

கிழக்கு லடாக் விவகாரம்: இந்தியா-சீனா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

தினத்தந்தி
|
23 Feb 2023 12:56 AM IST

கிழக்கு லடாக் விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

புதுடெல்லி,

லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து நிலவி வரும் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வரிசையில் இந்திய-சீன எல்லை விவகாரங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு நெறிமுறைக்குழுவினர் நேற்று பீஜிங்கில் சந்தித்து பேசினர்.

அப்போது லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப்பெறுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆக்கபூர்வமான முறையில் விவாதித்தனர்.

அத்துடன் அங்கு அமலில் உள்ள இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளின் அடிப்படையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை நிலைநாட்டுவது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக ராணுவ அதிகாரிகள் இடையேயான 18-வது சுற்று பேச்சுவார்த்தையை விரைவில் நடத்தவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இந்த தகவலை மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் வெளியிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்