கிழக்கு இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில்: டிசம்பர் 30ல் தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி
|கிழக்கு இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி வரும் 30ந்தேதி தொடங்கிவைக்கிறார்.
கொல்கத்தா,
மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து நியூ ஜல்பைகுரிக்கு இடையே புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை வரும் 30ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்த இரண்டு ரெயில் நிலையங்களுக்கிடையில் 550 கிலோமீட்டர் கொண்ட தூரத்தை 8 மணி நேரத்திற்கும் மேலான நேரத்தில் கடக்கும் தற்போதைய சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலை விட இந்த ரயில் வேகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரெயில் ஒட்டுமொத்தமாக நாட்டின் ஏழாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகும், மேலும் இது கிழக்கு இந்தியாவில் முதல் முறையாக இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலாகும்.
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான நடைமேடைகளைக் கொண்ட ரயில் நிலையமான ஹவுராவில் பார்க்கிங் மற்றும் பராமரிப்புக்கான வசதிகள் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், அடுத்த மூன்று ஆண்டுகளில் சிறந்த ஆற்றல் திறன் கொண்ட 400 வந்தே பாரத் ரெயில்கள் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.