< Back
தேசிய செய்திகள்
நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வுகளை பதிவு செய்தது விக்ரம் லேண்டர்.!
தேசிய செய்திகள்

நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வுகளை பதிவு செய்தது விக்ரம் லேண்டர்.!

தினத்தந்தி
|
31 Aug 2023 8:21 PM IST

நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வுகளை விக்ரம் லேண்டர் பதிவுசெய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பெங்களூர்,

நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டு உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்றது. அதில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.நிலவில் கந்தகம் உள்ளிட்டவை இருப்பதை நேற்று முன்தினம் கண்டறிந்து அனுப்பியது.

நேற்று விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பியது. இப்படி தொடர்ந்து நிலவின் மேற்பரப்பில் ஆய்வை மேற்கொண்டு வரும் சந்திரயான் 3 விண்கலம் இன்று பிளாஸ்மா இருப்பதையும் கண்டுபிடித்தது.

இந்த நிலையில், நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வுகளை விக்ரம் லேண்டர் பதிவுசெய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டரில் உள்ள இல்சா என்ற கருவி சிறிய அளவிலான அதிர்வுகளை கண்காணிக்கும். குறிப்பாக பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் சென்றபோது ஏற்பட்ட சிறிய அளவிலான அதிர்வை கூட இல்சா கருவி கண்காணித்தது.

குறிப்பாக, ரோவர் செல்லும்போது ஏற்பட்ட அதிர்வை தாண்டி கடந்த 26-ந்தேதி கூடுதலாக இயற்கையாக நில அதிர்வு ஏற்பட்டதை இல்சா கருவி கண்டுபிடித்துள்ளது. இந்த அதிர்வானது பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவது போலவே நிலவிலும் ஏற்படுகிறதா.. இல்லை வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்