< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் மிதமான நிலநடுக்கம்
|16 Aug 2023 11:08 AM IST
மராட்டியத்தில் 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மும்பை,
மராட்டியத்தின் கோலாப்பூர் பகுதியில் இன்று காலை 6.45 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோலாப்பூர் மாவட்ட நிலப்பரப்பில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை .