< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மணிப்பூரில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு
|8 July 2023 3:00 AM IST
மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
உக்ருல்,
மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ருல் மாவட்டத்திற்கு மேற்கு தென்மேற்கில் 13 கிலோ மீட்டர் தூரத்தில் அதிகாலை 12.14 மணியளவில் 70 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் தொடர்பான விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.