< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
உத்தர்காசியில் லேசான நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவு
|28 Dec 2022 7:04 AM IST
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இன்று அதிகாலையில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
உத்தர்காசி,
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் இன்று அதிகாலையில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 2.19 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் தரையில் இருந்து 5 கிமீ ஆழத்தில் இருந்தது.