< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அருணாச்சலப்பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு..!
|26 May 2022 3:26 PM IST
அருணாச்சலப்பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
தவாங்,
அருணாச்சலப்பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
தவாங் பகுதியில் இருந்து வடக்கே 506 கிலோ மீட்டர் தொலைவில் தரைப்பகுதியிலிருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மதியம் 1.18 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.