< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அருணாச்சல பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு
|18 Sept 2022 9:07 PM IST
அருணாச்சல பிரதேசம் மாநிலம் திபாங் பள்ளத்தாக்கில் இன்று மாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
திபாங்,
அருணாச்சல பிரதேசம் மாநிலம் திபாங் பள்ளத்தாக்கில் இன்று மாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 6.27 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.