< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மும்பை அருகே அரபிக்கடலில் லேசான நிலநடுக்கம்
|5 Jan 2024 11:06 PM IST
வடகிழக்கு மாநிலமான மிசோரமிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மும்பை,
மும்பை அருகே அரபிக் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்திய நேரப்படி இரவு 9:52 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வடகிழக்கு மாநிலமான மிசோரமிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.