அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
|கடந்த சனிக்கிழமை காலையில் இப்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது
அந்தமான்,
அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று மாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று மாலை 6.18 மணியளவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) கூறியுள்ளது.
இதுகுறித்து தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "நிகோபார் தீவுகளில் செவ்வாய்க்கிழமை மாலை 6.18 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கடல் பகுதியில் 21 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டா் அளவு கோலில் 4.3-ஆகப் பதிவானது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவலும் வரவில்லை. இதற்கு முன் கடந்த சனிக்கிழமை காலையில் இப்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.