< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு
|6 March 2023 6:28 AM IST
அந்தமான் நிகோபர் தீவில் 5.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
போர்ட்பிளேர்,
அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளது.
இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.