< Back
தேசிய செய்திகள்
லடாக், மேகாலயாவில் இன்று உணரப்பட்ட நிலநடுக்கம்
தேசிய செய்திகள்

லடாக், மேகாலயாவில் இன்று உணரப்பட்ட நிலநடுக்கம்

தினத்தந்தி
|
4 Feb 2024 5:58 PM IST

லடாக்கின் கார்கில் பகுதியில் இன்று மதியம் 2.42 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

கார்கில்,

மேகாலயாவின் கிழக்கு கரோ ஹில்ஸ் பகுதியில் இன்று மதியம் 2.37 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.5 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் 12 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, லடாக்கின் கார்கில் பகுதியில் இன்று மதியம் 2.42 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.8 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

வடமாநில பகுதிகளில் இன்று மதியம் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்