< Back
தேசிய செய்திகள்
அந்தமானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 3.9 ஆக பதிவு
தேசிய செய்திகள்

அந்தமானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 3.9 ஆக பதிவு

தினத்தந்தி
|
15 April 2023 8:06 AM IST

அந்தமானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.9- ஆக பதிவாகியுள்ளது.

போர்ட் பிளேர்,

அந்தமானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரே நாளில் சுமார் 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று காலை மீண்டும் அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமானின் திக்லிப்பூர் அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.9 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் செய்திகள்