< Back
தேசிய செய்திகள்
காஷ்மீரில் அதிகாலையில் என்கவுண்ட்டர்; ராணுவ வீரர் காயம்
தேசிய செய்திகள்

காஷ்மீரில் அதிகாலையில் என்கவுண்ட்டர்; ராணுவ வீரர் காயம்

தினத்தந்தி
|
23 July 2024 8:04 AM IST

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பத்தல் பிரிவில் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றபோது, அதனை பாதுகாப்பு வீரர்கள் முறியடித்து உள்ளனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பத்தல் பிரிவில் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றபோது, அதனை பாதுகாப்பு வீரர்கள் முறியடித்து உள்ளனர். இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கி சண்டை நடந்தது.

இதில், வீரர் ஒருவர் காயமடைந்து உள்ளார். அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதற்கு முன், காஷ்மீரின் ரஜோரி பகுதியில் குண்டா கிராமத்தில் நேற்று பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதற்கு படையினரும் பதிலடியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக ஜம்மு பகுதியில், பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. சமீபத்தில் கத்துவா பகுதியில் ராணுவ பாதுகாப்பு வாகனம் மீது நடந்த தாக்குதல், தோடா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்கள், உதம்பூரில் நடந்த தாக்குதல்கள் ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன.

இந்த தாக்குதல்களில், பாதுகாப்பு படையினரில் உயரதிகாரி உள்பட ராணுவ வீரர்கள் பலர் பலியாகி உள்ளனர். பயங்கரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்