< Back
தேசிய செய்திகள்
மிசோரமில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

மிசோரமில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு

தினத்தந்தி
|
5 Jan 2024 8:52 AM IST

ஜம்மு காஷ்மீரில் நேற்று நள்ளிரவு 12.38 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஸ்ரீநகர்,

ஜப்பானில் நேற்று முன்தினம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கம் அந்நாட்டின் இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா மாகாணங்களை தாக்கியது. இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன.

இந்த பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 62 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக ரஷியா, மியான்மர், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஜம்மு காஷ்மீரில் நேற்று நள்ளிரவு 12.38 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.

இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் மிசோரம் மாநிலத்தில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டு உள்ளது. மிசோரத்தின் லங்லை பகுதியில் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் 3.5 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்