< Back
தேசிய செய்திகள்
நாளை ரஷியா செல்கிறார் ஜெய்சங்கர்
தேசிய செய்திகள்

நாளை ரஷியா செல்கிறார் ஜெய்சங்கர்

தினத்தந்தி
|
24 Dec 2023 9:32 PM IST

நாளை 25 ம் தேதி முதல் 29 ம் தேதி வரையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

புதுடெல்லி,

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ரஷியாவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது:

நாளை 25 ம் தேதி முதல் 29 ம் தேதி வரையில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

சுற்றுப்பயணத்தின் போது அவர் அந்நாட்டின் துணை பிரதமர், தொழிற்துறைமந்திரி, வர்த்தகத்துறை மந்திரி, வெளியுறவுத்துறை மந்திரி ஆகியோரை சந்தித்து உலகில் நிலவி வரும் சூழ்நிலைகள் குறித்து பேசுகிறார். மேலும் அங்கு நடைபெறும் உயர்மட்ட கூட்டத்திலும் கலந்து கொண்டு இருநாடுகளிடையே ஒப்பந்த பரிமாற்றமும் செய்து கொள்கிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்