< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அக்.15ல் எகிப்து பயணம் மேற்கொள்கிறார் மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர்
|13 Oct 2022 10:56 PM IST
இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் வரும் 15ம் தேதி இரண்டு நாள் பயணமாக எகிப்து செல்கிறார்.
புதுடெல்லி,
இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் வரும் 15ம் தேதி இரண்டு நாள் பயணமாக எகிப்து செல்கிறார். இந்த பயணத்தின் முக்கியத்துவமாக இருதரப்பு பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து அவர் விவாதிக்க உள்ளார்.
ஆப்பிரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்களிப்புகளில் ஒன்றாக எகிப்து இருந்து வருகிறது. இதனால் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.