< Back
தேசிய செய்திகள்
வாரிசு அரசியல் விஷம் போன்றது - அமித்ஷா தாக்கு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

வாரிசு அரசியல் விஷம் போன்றது - அமித்ஷா தாக்கு

தினத்தந்தி
|
21 Aug 2023 12:02 AM IST

வாரிசு அரசியல் விஷம் போன்றது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.

போபால்,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்தியபிரதேச மாநிலத்துக்கு சென்றார். மாநில அரசின் சாதனை அறிக்கையை வெளியிட்டார். பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பா.ஜனதாவிலும் வாரிசு அரசியல் நிலவுவதாகவும், பா.ஜனதா தலைவர்களின் குடும்பத்தினருக்கு டிக்கெட் கொடுக்கப்படுவது பற்றியும் கேட்கப்பட்டது.

அதற்கு அமித்ஷா கூறியதாவது:-

எங்காவது ஒரு சிலருக்கு தகுதி அடிப்படையில் டிக்கெட் கொடுக்கப்பட்டு இருக்கலாம். அதை வைத்து, வாரிசு அரசியல் பிரச்சினையை நீர்த்துப் போக செய்யாதீர்கள். வாரிசு அரசியல், விஷம் போன்றது.

நான் யாரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. காங்கிரஸ், தி.மு.க., உத்தவ் தாக்கரே சிவசேனா ஆகிய கட்சிகள் வாரிசு அரசியல் செய்கின்றன. அங்கு ஒரே ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்தான் கட்சியும், ஆட்சியிலும் வர முடியும். அதைத்தான் வாரிசு அரசியல் என்று அழைக்க முடியும்.

ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இயங்குகின்றன. அப்படியானால், கீழ்மட்டத்தில் இருந்து வருபவர்களின் கதி என்ன? என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்