< Back
தேசிய செய்திகள்
திருமண ஊர்வலத்தில் வாணவேடிக்கையின்போது தீப்பொறி பட்டு வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த பந்தல், ஆட்டோ எரிந்து சாம்பல்
தேசிய செய்திகள்

திருமண ஊர்வலத்தில் வாணவேடிக்கையின்போது தீப்பொறி பட்டு வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த பந்தல், ஆட்டோ எரிந்து சாம்பல்

தினத்தந்தி
|
20 Feb 2024 5:40 AM IST

பொதுமக்கள் வாளி மற்றும் குடத்தில் தண்ணீர் கொண்டுவந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

பல்நாடு,

ஆந்திராவில் திருமண ஊர்வலத்தில் வாணவேடிக்கையின்போது தீப்பொறி பட்டு வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த பந்தல் மற்றும் ஆட்டோ எரிந்து சாம்பலானது.

பல்நாடு மாவட்டம் நரசராவ்பேட்டை கிராமத்தில் பிரம்மையா என்பவருடைய மகனுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் மணமகனை வீட்டிலிருந்து மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது பட்டாசுகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது தீப்பொறி பட்டு பட்டாசுகள் அனைத்தும் மொத்தமாக வெடித்தது. மேலும் திருமணத்தை முன்னிட்டு வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த பந்தல் மீதும் தீப்பொறிகள் விழுந்து முழுவதுமாக எரிந்து சாம்பலானது.

பொதுமக்கள் வாளி மற்றும் குடத்தில் தண்ணீர் கொண்டுவந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்