< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தேர்தல் பிரசாரத்தின்போது மேனகாகாந்தி தவறி விழுந்து காயம்
|3 May 2023 3:15 AM IST
மழையினால் ஈரமாக இருந்த சாலையில் மேனகா காந்தி தவறி விழுந்தார்.
சுல்தான்பூர்,
உத்தரபிரதேசத்தில் நாளையும் (வியாழக்கிழமை), 11-ந் தேதியும் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஆளும் பா.ஜ.க. உள்பட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. எம்.பி.யுமான மேனகா காந்தி சுல்தான்புல் மாவட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் பிராசாரத்தில் ஈடுபட்டார். அதன்படி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் பிரவீன் அகர்வாலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக மேனகா காந்தி காசிகஞ்ச் நகருக்கு சென்றார்.
அங்கு அவர் காரில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்றார். அப்போது மழையினால் ஈரமாக இருந்த சாலையில் மேனகா காந்தி தவறி விழுந்தார். இதில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.