< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
|27 April 2024 9:08 PM IST
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். மேலும் திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் திருப்பதி கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் உறவினர்கள் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தனர். இதன் பின்னர் அவர்களுக்கு கோவில் வளாகத்தில் உள்ள ரங்க நாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.