< Back
தேசிய செய்திகள்
ஒடிசாவில் துர்கா பூஜை கூட்ட நெரிசலில் திருட்டு - பெண்கள் உள்பட 26 பேர் கைது
தேசிய செய்திகள்

ஒடிசாவில் துர்கா பூஜை கூட்ட நெரிசலில் திருட்டு - பெண்கள் உள்பட 26 பேர் கைது

தினத்தந்தி
|
25 Oct 2023 2:58 AM IST

கூட்டநெரிசலில் நகைகள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்ததாக 5 பெண்கள் உள்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

புவனேஸ்வர்,

நாடு முழுவதும் துர்கா பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரிலும் பல்வேறு பகுதிகளில் துர்கா பூஜை நடைபெற்று வருகிறது. இங்கு துர்கா பூஜை கூட்டநெரிசலை பயன்படுத்தி கொள்ளையடிக்கும் கும்பல் செயல்பட்டு வந்தது.

கூட்டநெரிசலின் போது தங்க நகைகள், செல்போன்கள் மற்றும் பிற விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையடித்ததாக 5 பெண்கள் உள்பட 26 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்

புவனேஸ்வர் சஹீத் நகர், கந்தகிரி, மஞ்சேஸ்வர், நயபள்ளி மற்றும் லட்சுமிசாகர் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் இவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 8 செல்போன்கள் மற்றும் ரூ.7,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்