< Back
தேசிய செய்திகள்
தெலங்கானாவில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு
தேசிய செய்திகள்

தெலங்கானாவில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

தினத்தந்தி
|
10 July 2022 6:36 PM IST

மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.தலைநகர் ஐதராபாத் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் தவிக்கும் மக்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அவை வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பல நீர்த்தேக்கங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி செல்கிறது. கரையோர பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

இந்த நிலையில் தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில், தெலங்கானாவில் நாளை முதல் புதன் கிழமை வரை, 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்