< Back
தேசிய செய்திகள்
பருவமழை பொய்த்து போனதால் பயிர் சாகுபடி 11 ஆயிரம் எக்டேராக குறைந்தது
தேசிய செய்திகள்

பருவமழை பொய்த்து போனதால் பயிர் சாகுபடி 11 ஆயிரம் எக்டேராக குறைந்தது

தினத்தந்தி
|
21 Aug 2023 2:21 AM IST

கோலாரில் பருவமழை பொய்து போனதால் விவசாய சாகுபடி 11,647 ஆயிரம் எக்டேராக குறைந்தது.

கோலார் தங்கவயல்:-

பருவமழை பொய்த்துபோனது

கோலார் மாவட்டம் என்றால் அது வறட்சியுடன் காணப்படும் என்று கூறப்படுவது வழக்கம். அதற்கு ஏற்றார்போல ஒவ்வொரு ஆண்டும், பருவமழை பொய்த்து போவதால், விவசாயிகள் வானம் பார்த்த பூமியாக காத்திருக்க வரவேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதன்படி இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனது. கடந்த ஜூன் மாதங்களில் வழக்கமாக மழை பெய்யவேண்டும். ஆனால் அந்த மழை பெய்யவில்லை.

இதையடுத்து ஜூலை மாதம் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் பயிர்களை சாகுபடி செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். குறிப்பாக கோலாரில் பிரதான பயிராக இருக்கும் கேழ்வரகு, சோளம், மக்காசோளத்தை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பருவமழை பொய்த்து போனதுதான் முக்கிய காரணம் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர்

68 எக்டேர் பயிர் சாகுபடி

வழக்கமாக கோலார் மாவட்டத்தில் 68 எக்டேர் அளவிற்கு கேழ்வரகு, சோளம் உள்பட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு மழை இல்லாததால் 11,647 எக்டேர் விவசாயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல மாலூர் தாலுகாவில் 12,161 எக்டேருக்கு பயிர்கள் சாகுபடி செய்யப்படும்.

ஆனால் மழை பொய்த்து போனதால் இந்த ஆண்டு 355 எக்டேர் மட்டுமே பயிர்கள் சாகுபடி செய்ய முடிந்தது. சீனிவாசப்பூர் தாலுகாவில் 9,962 எக்டேர் பயிர்கள் சாகுபடி செய்யப்படும். ஆனால் இதுவரை 365 எக்டேர் மட்டுமே பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது.

நிவாரணம்

இந்த பயிர் சாகுபடி குறைவு குறித்து வேளாண் இணை இயக்குனர் வி.டி.ரூபாதேவி கூறியதாவது:- ஆகஸ்டு மாதத்தில் 5.3 செ.மீ மழை பெய்யவேண்டும். ஆனால் இதுவரை 1 செ.மீ மட்டுமே மழை பெய்துள்ளது. 82 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் இதுவரை பெய்த மழையின் அளவை எடுத்து கொண்டால் 21 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய சாகுபடி அதிகளவு பாதிக்கப்பட்டிருக்கிறது.

விவசாயிகள் வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மாநில அரசுதான் இதுகுறித்து முடிவு செய்யும். மாநில அரசு அறிவித்த பின்னர் எவ்வளவு வறட்சி ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்