< Back
தேசிய செய்திகள்
வரதட்சணை கொடுமையால்  தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தேசிய செய்திகள்

வரதட்சணை கொடுமையால் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

தினத்தந்தி
|
25 Sept 2023 12:15 AM IST

உப்பள்ளியில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உப்பள்ளி-

உப்பள்ளியில் வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கணவர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திருமணம்

தார்வார் மாவட்டம் கல்கட்டகி தாலுகா பேகேநாகரகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது32). இவரது மனைவி சுமங்கலா. இவர்களுக்கு திருமணம் நடந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் பிரவீன், சுமங்கலா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும், மனைவியிடம் கூடுதல் வரதட்சணை பெற்றோர் வீட்டில் வாங்கிவிட்டு வரும்படி பிரவீன் கூறி வந்தார்.

இந்தநிலையில், திருமணத்தின்போது சுமங்கலாவுக்கு வரதட்சணையாக 15 பவுன் நகையை பெற்றோர் கொடுத்து அனுப்பினர். ஆனால் அவர்கள் முதலில் 30 பவுன் நகை வரதட்சணையாக தருவதாக கூறினர். ஒரு ஆண்டு ஆகியும் 15 பவுன் வரதட்சணையை கொடுக்காததால் பிரவீன் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

15 பவுன் நகை

இந்தநிலையில், சுமங்களாவின் பெற்றோர் 15 பவுன் நகையை ஓராண்டு கழித்து பிரவீனிடம் கொடுத்தனர். இதனால் பிரவீன் சமாதானம் அடைந்தார். இதையடுத்து சுமங்களா, பிரவீன் ஆகிய 2 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சுமங்களாவின் தந்தை இறந்து விட்டார். இறுதி சடங்கில் கலந்து கொள்ள சுமங்களா தந்தை வீட்டிற்கு சென்றார்.

அப்போது, தன்னை கணவர் பிரவீன், உனது பெற்றோரிடம் உள்ள நிலத்தில் பாதி எனது பெயருக்கு மாற்றி தர வேண்டும் எனவும், அடிக்கடி தகராறு செய்வதாகவும் சுமங்களா அவரது தாயாரிடம் கூறி அழுதாள். பின்னர் மறுநாள் அவர் அங்கிருந்து சென்றார். இந்தநிலையில் நேற்று முன்தினம் கணவர் வீட்டில் சுமங்களா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரேத பரிசோதனை

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ெசன்று சுமங்களாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சுமங்களா சாவதற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், கணவர் என்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு தினமும் அடித்து தொல்லை கொடுக்கிறார்.

மேலும் பெற்ேறாரிடம் உள்ள நிலத்தை தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி கூறி வந்தார். இதனால் நான் மன உளைச்சலில் உள்ளேன். இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என இருந்தது. சுமங்களா தற்கொைல செய்து கொண்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுமங்களாவின் தாயார், உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர்.

4 பேர் மீது வழக்கு

அப்ேபாது, சுமங்களாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்தநிலையில், சுமங்களா தற்கொலை ெசய்து கொண்டதில் பிரவீன் மற்றும் அவரது பெற்றோர் உள்பட 4 பேர் மீது கல்கட்டகி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்