< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தொடர் கனமழை காரணமாக நிரம்பி வழியும் சிக்கஜாஜூர் தடுப்பணை
|3 Oct 2022 12:15 AM IST
தொடர் கனமழை காரணமாக சிக்கஜாஜூர் தடுப்பணை நிரம்பி வழிகிறது.
சித்ரதுர்கா;
சித்ரதுர்காவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை கொட்டி வந்தது. இந்த தொடர் கனமழை காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில், சித்ரதுர்கா அருக லம்பானிஹட்டி கிராமத்தில் உள்ள சிக்கஜாஜூர் தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளது.
மேலும் அந்த தடுப்பணை நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்கிறது. இதனால் அருகே உள்ள தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமாகி உள்ளன. அந்தப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் தடுப்பணைக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள்.
மேலும் ஏராளமான வீடுகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்தப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். சிக்கஜாஜூர் தடுப்பணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.