< Back
தேசிய செய்திகள்
மங்களூருவில் மோசமான வானிலை:  துபாய் விமானம் பெங்களூருவுக்கு திருப்பப்பட்டது
தேசிய செய்திகள்

மங்களூருவில் மோசமான வானிலை: துபாய் விமானம் பெங்களூருவுக்கு திருப்பப்பட்டது

தினத்தந்தி
|
6 July 2022 3:10 AM IST

மங்களூருவில் மோசமான வானிலை காரணமாக துபாய் விமானம் பெங்களூருவுக்கு திருப்பப்பட்டது

மங்களூரு: கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை ெபய்து வருகிறது. இதனால், மங்களூரு பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது.

இந்த நிலையில் நேற்று துபாயில் இருந்து மங்களூருவுக்கு வந்த விமானம் ஒன்று, மோசமான வானிலை காரணமாக பெங்களூருவுக்கு திருப்பப்பட்டது. இதேபோல், சவுதி அரேபியா தமாம் நகரில் இருந்து மங்களூருவுக்கு வந்த விமானமும் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது.

மேலும் செய்திகள்