< Back
தேசிய செய்திகள்
துபாய் சென்ற விமானத்தில் இன்ஜின் கோளாறு - நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம்
தேசிய செய்திகள்

துபாய் சென்ற விமானத்தில் இன்ஜின் கோளாறு - நாக்பூரில் அவசரமாக தரையிறக்கம்

தினத்தந்தி
|
21 Jun 2024 1:34 AM GMT

துபாய் சென்ற விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மும்பை,

வங்காளத்தேசத்தில் உள்ள சிட்டகாங்க் நகரில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் நேற்று திடீரென இன்ஜின் கோளாறு ஏற்பட்டது. அந்த விமானத்தில் மொத்தம் 175 பயணிகள் இருந்தனர். இதையடுத்து விமானிகள் அந்த விமானத்தை நாக்பூரில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரினர்.

விமானத்தை தரையிறக்க அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, நாக்பூரில் காலை 10.30 மணிக்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களுக்கான மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த விமானம் இரவு 7.45 மணிக்கு நாக்பூரில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

மேலும் செய்திகள்