< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நடு வானில் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணி கைது
|8 April 2023 7:20 AM IST
டெல்லியில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் குடிபோதையில் அவசர கதவை திறக்க முயன்றார்.
புதுடெல்லி,
டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயன்ற நபர் கைதுசெய்யப்பட்டார். 40 வயதான அந்த நபர் குடிபோதையில் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று காலை 7:56 மணியளவில் நடந்தது. இதுகுறித்து இண்டிகோ நிறுவனம் கூறுகையில், "டெல்லியில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் குடிபோதையில் அவசர கதவை திறக்க முயன்றார்.
இதனை கவனித்த விமானத்தில் இருந்த பணியாளர்கள் கேப்டனிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்ட பயணி எச்சரிக்கப்பட்டார். இதையடுத்து விமானம் பெங்களூரு வந்ததும், அந்த பயணி சி.ஐ.எஸ்.எப். அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.