< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அந்தமானில் கைப்பற்றப்பட்ட ரூ.475 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிப்பு
|29 Jun 2024 5:53 PM IST
அந்தமானில் கைப்பற்றப்பட்ட ரூ.475 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை போலீசார் அழித்தனர்.
போர்ட் பிளேர்,
அந்தமான் மற்றும் நிக்கோபார் காவல்துறை சார்பில் கடந்த 26-ந்தேதி சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மாபெரும் போதைப்பொருள் ஓழிப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதன்படி இதுவரை சுமார் ரூ.475 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருட்கள் அந்தமான் மற்றும் நிக்கோபார் போலீசாரால் கைப்பற்றப்பட்டவை ஆகும். இந்த ஒழிப்பு நடவடிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. தேவேஷ் சந்திர ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். மேலும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் காவல்துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.