< Back
தேசிய செய்திகள்
எத்தியோபியாவில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.13½ கோடி போதைப்பொருள் சிக்கியது; கானா நாட்டை சேர்ந்தவர் கைது
தேசிய செய்திகள்

எத்தியோபியாவில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.13½ கோடி போதைப்பொருள் சிக்கியது; கானா நாட்டை சேர்ந்தவர் கைது

தினத்தந்தி
|
23 Sep 2022 6:45 PM GMT

எத்தியோபியாவில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.13½ கோடி போதைப்பொருட்கள் சிக்கியது. இதுதொடர்பாக கானா நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு:

வயிற்றில் பதுக்கி கடத்தல்

எத்தியோபியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபபாவில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.

அப்போது ஒரு நபரின் மீது சந்ேதகமடைந்த அதிகாரிகள் அவரின் உடைமைகளை ேசாதனையிட்டனர். ஆனால் அவரது உடைமைகளில் போதைப்பொருள் எதுவும் இல்லை. ஆனாலும் அவரிடம் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது வயிற்றுக்குள் பதுக்கி வைத்து போதைப்பொருட்களை கடத்தி வந்ததை அந்த பயணி ஒப்புக்கொண்டார்.

ரூ.13.60 கோடி மதிப்பு

இதையடுத்து அந்த பயணியின் வயிற்றில் இருந்து போதைப்பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டது. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை எடை பார்த்த போது அது 1½ கிலோ இருந்தது. அந்த போதைப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.13.60 கோடி ஆகும்.

மேலும் போதைப்பொருட்களை கடத்தி வந்தவர் கானா நாட்டை சேர்ந்தவர் என்பதும், அவர் பெயர் பாக் அம்படு கேவாட்வோ (வயது 53) என்பதும் தெரிந்தது. விசாரணைக்கு பின்னர் பாக் அம்படுவை கோர்ட்டில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் பின்னர் அவரை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்