< Back
தேசிய செய்திகள்
மும்பையில் ரூ.18.05 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; 2 நைஜீரியர்கள் உட்பட 3 பேர் கைது
தேசிய செய்திகள்

மும்பையில் ரூ.18.05 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; 2 நைஜீரியர்கள் உட்பட 3 பேர் கைது

தினத்தந்தி
|
25 July 2023 12:45 PM IST

மும்பையில் வெவ்வேறு இடங்களில் நடந்த சோதனையில் ரூ.18.05 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 2 நைஜீரியர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை தானே பகுதியில் போலீசார் இரண்டு வெவ்வேறு இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டனர். இதில் கார்கர் ரயில் நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்ட போது சந்தேக படும்படி இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்களிடம் போதை பொருள் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து சுமார் ரூ.4.40 லட்சம் மதிப்புள்ள 44 கிராம் மெத்தகுலோன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இருவரும் நைஜீரிய நாட்டை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மற்றொரு இடமான ஏபிஎம்சி காவல் நிலைய எல்லையில் உள்ள ஒரு இடத்தில் ஏஎன்சி நடத்திய சோதனையில் ஒருவரிடம் இருந்து ரூ. 13.65 லட்சம் மதிப்புள்ள 2.60 கிராம் எடையுள்ள 91 எல்எஸ்டி கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூவரின் மீதும் போதைப்பொருள் கடத்தல் சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு இடங்களில் நடந்த சோதனையில் ரூ.18.5 லட்சம் மதிப்புள்ள போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எங்கிருந்து போதைப்பொருள் கிடைத்தது, யாருக்கு விற்க திட்டமிட்டனர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்