< Back
தேசிய செய்திகள்
நேபாளம்-இந்தியா எல்லையில் ரூ.1.65 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 4 பேர் கைது
தேசிய செய்திகள்

நேபாளம்-இந்தியா எல்லையில் ரூ.1.65 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் - 4 பேர் கைது

தினத்தந்தி
|
20 Sept 2022 8:09 PM IST

நேபாளத்தின் எல்லை அருகே ரூ.1.65 கோடி மதிப்பிலான ஹெராயின் வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் இந்தியா மற்றும் நேபாளத்தின் எல்லை அருகே அமைந்துள்ள சோனலி என்ற பகுதியில், ரூ.1.65 கோடி மதிப்பிலான ஹெராயின் வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநில காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையின் 'சஷாஸ்த்ரா சீமா பல்' பிரிவு அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட தினேஷ் லோதி(42), பதார் குப்தா(45), ஃபிரோஸ் கான்(43) மற்றும் கலீல் கான்(32) ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்