அசாமில் 100 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்: 4 பேர் கைது
|மிசோரமில் இருந்து போதைப்பொருள் கடத்தி வருவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கவுகாத்தி,
அசாமில் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் சுமார் 100 கோடி மதிப்புள்ள போதைபொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் நடைவியாபாரிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போதை தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து அசாம் காவல்துறை எடுத்த அதிரடி சோதனையால் 100 கோடி மதிப்புள்ள போதைபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
மிசோரமில் இருந்து போதைப்பொருள் கடத்தி வருவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தீவிர பரிசோதனையை தொடங்கினோம்.,இன்று பிற்பகல் 2 மணியளவில் நீலாம்பஜார் சோதனைச்சாவடியில் உள்ள சுப்ரகாண்டியில் ஒரு காரை மறித்து குற்றாவாளிகளை பிடித்துள்ளோம் என்று எஸ்டிஎப் சப் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மஹந்தா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
மிசோரம் பதிவு எண் கொண்ட காரை முழுமையாக சோதனை செய்ததில், 5.1 கிலோ ஹெராயின், 64,000 போதை மாத்திரைகள் மற்றும் நான்கு வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பிடிபட்டவர்களில் ஒருவர் கரீம்கஞ்சைச் சேர்ந்தவர் எனவும் மற்ற மூவரும் மிசோரமின் தேன்சாலைச் சேர்ந்தவர்கள் என்று சப்இன்ஸ்பெக்டர் மஹந்தா கூறினார்.