< Back
தேசிய செய்திகள்
அசாமில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல், 2 பெண்கள் கைது
தேசிய செய்திகள்

அசாமில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல், 2 பெண்கள் கைது

தினத்தந்தி
|
7 Oct 2022 7:54 PM IST

அசாம் மாநிலத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

திஸ்பூர்,

அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தியதாக இரண்டு பெண்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.

ஒரு ரகசிய தகவலின் பேரில், மாவட்ட காவல்துறை, சிஆர்பிஎப் மற்றும் ரயில்வே காவல்துறையினரின் கூட்டுக் குழு, மரியானி எக்ஸ்பிரஸில் ஏறுவதற்காக பொகஜான் ரயில் நிலையத்தில் காத்திருந்த இரண்டு பெண்களிடமிருந்து போதைப்பொருளைக் கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்களிடம் இருந்து 20 சோப்புப் பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 246.95 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள மெரபானி மற்றும் நாகாலாந்தில் உள்ள திமாபூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்