போதைப்பொருட்கள் கடத்திய 3 பேர் கைது
|போதைப்பொருள்கள் கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு:
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாநகர போலீசார் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் போந்தல் பகுதியில் சிலர் போதைப்பொருட்கள் விற்பதாக மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்போில் அங்கு சென்ற போலீசாா் போந்தல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
மேலும் காரில் சோதனை செய்தபோது 170 கிராம் எடையுள்ள எம்.டி.எம்.ஏ. போதைப்பொருட்கள் இருப்பது தொியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.9 லட்சம் என கூறப்படுகிறது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவா்கள் படகபெட்டு பகுதியை சேர்ந்த அம்ஜத் கான்(வயது 42), மஞ்சநாடி பகுதியை சேர்ந்த அப்துல் பஷீர்(39) மற்றும் மூர்செட் பகுதியை சேர்ந்த முகமது இம்ரான்(36) என்பது தெரியவந்தது.
போலீசார் அவர்களிடம் இருந்த டிஜிட்டல் எடை எந்திரம், 6 செல்போன்கள், 170 கிராம் எடையுள்ள எம்.டி.எம்.ஏ. போதைப்பொருட்கள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அம்ஜத்கான் கடந்த வாரம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.