< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
|2 April 2024 5:03 PM IST
ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக் கடந்த மாதம் 9 ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரின் நீதிமன்ற காவல் ஏப்.16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9-ம் தேதி டெல்லியில் கைது செய்தனர். ஜாபர் சாதிக்கின் கூட்டாளிகள் சதா, முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் 5 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, 5 பேரின் காவலை வரும் 16 ஆம் தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டது.